அசம்பாவிதங்களைத் தடுக்க கடந்த 21 ந் தேதி மாவட்ட நிர்வாகத்தால் 144 தடை போடப்பட்டது. பதற்றம் நிலவியதால் 144 தடை நேற்று வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. மேலும் தூத்துகுடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இணையதள சேவை நிறுத்தப்பட்டதால் பல முக்கிய வேலைகள் முடங்கின. கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்தது.
இந்நிலையில் தூத்துக்குடியில் 95 சதவீதம் இயல்பு நிலை திரும்பியுள்ளதால், 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று காலை அறிவித்தார். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் நேற்றிரவு முதல் இணைய சேவை முடக்கத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியகம் உத்தரவு பிறப்பித்தது.