தமிழக வரலாற்றில் முதன்முறையாக தலைமை செயலகத்தில் வருமான வரித்துறை சோதனை

புதன், 21 டிசம்பர் 2016 (15:28 IST)
30 நிமிடங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் தலைமை செயலகத்தில் உள்ள தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் அறையில் சோதனையில் ஈடுப்பட்டனர். வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். 


 
தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீட்டில் சுமார் 10 மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து சோதனை நடைப்பெற்று வருகிறது. ஏற்கனவே பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அவரிடம் இருந்து ஏராளாமான தங்கம், பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியது. அவரிடம் சிக்கிய ஆவணங்கள் அரசு அதிகாரிகளுடன் தொடர்பு இருந்ததை அடுத்து தற்போது தலைமை செயலாளர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.
 
சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள ராம் மோகன் ராவ் மகன் விவேக் வீட்டில் சுமார் 10 மணி நேரமாக வருமான வரித்துறையினரால் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
 
தற்போது கிடைத்த தகவலின் படி சோதனை செய்த இடங்களில் முக்கிய ஆவணங்கள் மட்டுமே சிக்கியுள்ளதாக, பணம் மற்றும் தங்க நகைகள் குறித்த தகவல் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணம் ஏதுவும் ரகசிய அறையில் பதுக்கப்பட்டுள்ளதாக என்று தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
 
கிடைத்த ஆவணங்களை வருமான வரித்துறை, அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகிய துறையினர் தலைமை செயலகத்துக்கு எடுத்துச் சென்று பிரித்து சோதனை செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்