மெரினாவில் 500-க்கும் மேற்பட்டோர் இன்றும் தொடரும் போராட்டம்!

செவ்வாய், 24 ஜனவரி 2017 (13:13 IST)
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் போராட்டத்தால் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வந்தனர்.

 
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை குண்டுகட்டாக வெளியேற்றியது. சுற்றி வளைத்த கொண்ட காவல்துறை  விடாபிடியாக மாணவர்களை வெளியேற்றியது. இதனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், மாணவர்கள், இளைஞர்களின்  மண்டைகள் உடைந்தன. பெண்கள் என்று பார்க்காமல் அடித்துள்ளனர் போலீஸ். போலீஸின் வெறியாட்டம் தொடர்ந்து நடந்து  வருகிறது. சென்னையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த போலீஸ் பெண்கள் மீது ஈவு இரக்கமின்றி தடியடி நடத்தியுள்ளன.
 
இந்தநிலையில் நேற்று மாலை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நிரந்தர சட்டம் நிறைவேற்றப்பட்டது. இருந்தபோதிலும் இன்றும்  சென்னை மெரினா கடற்கரையில் 500 மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இப்போராட்டத்தில் கைது செய்தவர்களை விடுதலை  செய்ய வேண்டும். தேவையில்லாமல் தடியடி நடத்திய காவல்துறை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டத்தில்  ஈடுப்பட்டவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
மெரினா கடற்கரை சாலை, காமராஜர் சாலை உட்பட அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருவதால், போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு மீனவர்கள் சிலர் கடல் வழியாக வந்து உணவுகளை வழங்கிவருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்