இதை அடுத்து, கலாபவன் மணி இறந்துவிட்டதால், டினி டாம் என்கிற குணச்சித்திர நடிகரை அப்படத்தின் கதாநாயகன் ஆக்கி, படப்பிடிப்பை நடத்தினர். ஜான்சன் எஸ்தப்பன் என்பவர் இயக்கும் இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்திருக்கிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த இளையராஜா அதில் கதையின் நாயகனாக நடித்திருந்த 65 வயதான டபேதார் கேரக்டரையும் அதில் நடித்திருந்தவரையும் குறிப்பிட்டு இயக்குனரிடம் ரொம்பவே பாராட்டியுள்ளார். ஆனால் படம் முடிந்ததும் அந்த கேரக்டராக நடித்த 44 வயதான டினி டாம் 'அது நான் தான்' என இளையராஜாவின் முன்னால் வந்து நிற்க, இளையராஜா அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.