கொசுப் புழுக்கள் உருவாகும் சூழல் தென்பட்டால் அபராதம் : சுகாதாரத்துறை அதிரடி
புதன், 16 அக்டோபர் 2019 (17:24 IST)
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் ஒரு சில இடங்களில் காணப்படுகிறது. அதை தடுக்கும் வகையில் அரசு முயற்சி எடுத்து வருகிறது.
இந்நிலையில் டெங்கு ஒழிப்பு குறித்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமை அன்று ஆய்வு மேற்கொள்ளும்போது, கொசுப்புழுக்கள் உருவாகும் சூழல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை இயக்குநகரம் மூலம் வாரம் தோறும் வெள்ளிக் கிழமைகளில் அரசு கட்டிடம் மற்றும் தனியார் நிறுவனம் வீடுகள் ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தபடும் இதில் டெங்கு கொசுக்கள் உருவாதற்கான சூழல் இருந்தால் அபாராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.