மதிப்பெண் குறைந்தால் பெற்றோருக்கு அபராதம்: அடாவடி உத்தரவு போட்ட பள்ளி நிர்வாகம்

வியாழன், 12 அக்டோபர் 2017 (12:33 IST)
ஒரு மாணவர் சரியாக படிக்காமல் மதிப்பெண் குறைவாக எடுத்தால் அந்த மாணவனுக்கு தண்டனை கொடுப்பதுதான் வழக்கமாக நடவடிக்கையாக இருக்கும். ஆனால் கேளம்பாக்கம் அருகேயுள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள் மதிப்பெண் குறைவாக எடுத்தால் அவர்களுடைய பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் முறை நடந்தேறியுள்ளது. இதனால் பெற்றோர்கள் கொதிப்படைந்து உள்ளனர்.



இந்த பள்ளியில் ஒரு மாணவர் 75%க்கும் மேல் எடுத்தால் எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் 50% முதல் 75% வரையிலான மதிப்பெண் எடுத்தால் ஒரு மடங்கு கட்டணமும், 40% முதல் 50% வரை மதிப்பெண்கள் எடுத்தால் இருமடங்கு கட்டண உயர்வும் பெற்றோர்கள் செலுத்த வேண்டுமாம்.

அதுமட்டுமின்றி 40%க்கும் குறைவாக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் டிசியை வாங்கி கொண்டு செல்லலாம் என்று அந்த தனியார் பள்ளி அறிவித்துள்ளது. இதை வாய்மொழியாக கூறாமல் நோட்டீஸ் போன்று ஒவ்வொரு பெற்றோருக்கும் அனுப்பியுள்ளதால் பெற்றோர்கள் கொதிப்படைந்து உள்ளனர். இந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெற்றோர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்