ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பா? ஆளுனர் இன்று முடிவு

ஞாயிறு, 19 பிப்ரவரி 2017 (07:19 IST)
எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது ஜனநாயக விரோதம் என்றும், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்றும் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கவர்னரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.




மேலும் தங்கள் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டது தவறு தான் என்றும் அதற்கு வருந்துவதாகவும் கவர்னரிடம் கூறிய ஸ்டாலின் அதே நேரத்தில் வெளிப்படையான வாக்கெடுப்பினால் இந்த அமளி ஏற்பட்டதாகவும்,  மீண்டும் மறைமுகமாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநரிடம் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே கர்நாடகாவில் பங்காரப்பா தலைமையிலான ஆட்சிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது அப்போதைய கர்நாடக கவர்னர் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். இதேபோல் தமிழக பொறுப்பு கவர்னரும் உத்தரவிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்