இன்று மாநிலங்களவையில் இது குறித்து பேசிய சசிகலா புஷ்பா நடந்த சம்பவத்துக்கு திருச்சி சிவாவிடமும், திமுக தலைவர்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மேலும் தனது பாதுகாப்பு இல்லை எனவும், அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறினார்.
கட்சி தலைமை தன்னை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாக கூறிய சசிகலா புஷ்பா, அவர் தன்னை கன்னத்தில் அறைந்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், எத்தகைய அச்சுறுத்தல் வந்தாலும் தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை எனவும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.