சுவாதி என்னுடன் மட்டுமே பேச வேண்டும் என நினைத்தேன்: ராம்குமார்

திங்கள், 4 ஜூலை 2016 (18:24 IST)
கடந்த மாதம் 24ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி ராம்குமாரை கைது செய்ய முற்பட்ட போது தற்கொலைக்கு முயன்றதால், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததால் அவரிடம் விசாரணை தொடங்கியது. ராம்குமாரிடம் காவல்துறையினர் வாக்கு மூலம் பெற்றனர். அதில் ராம்குமார் இவ்வாறு கூறியுள்ளார்,


 

சுவாதிக்கும் எனக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டது.பின்னர் வாட்ஸ்- அப் மூலம் தொடர்பு கொண்ட அவரை, நேரில் பார்ப்பதற்கு வேண்டும் என்பதற்காகவே சென்னை வந்தேன். அடிக்கடி வாட்ஸ்-அப்பில் செய்திகள் அனுப்புவேன். அவரும் பதில் அனுப்புவார். பேஸ்புக் நண்பர் என்பதால் என்னிடம் நட்பாக பேசினார்.சில நாட்கள் ஆன பின்னர் எனது காதலை அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் பதில் எதுவும் கூறாமல் சென்றுவிட்டார்.

சுவாதிக்கு அதிக நண்பர்கள் இருக்கின்றனர். அது எனக்கு பிடிக்கவில்லை. சுவாதி என்னுடன் மட்டுமே பேச வேண்டும் என நினைத்தேன்.தொடர்ந்து நான் அவருக்கு கொடுத்த தொந்தரவு காரணமாக சுவாதி தனது அப்பாவின் துணையுடன் ரயில் நிலையத்திற்கு சென்று வந்தார்.பின்னர் இரு முறை ரயில் நிலையத்தில் சந்தித்து பேசினேன். அப்போது அவர் என்னை தேவாங்கு போல் இருப்பதாக தெரிவித்தார்.அப்போதே அவரது வாயினை கிழிக்க வேண்டும் என எனக்கு கோபம் வந்தது. எனினும் சுவாதி மேல் நான் கொண்ட காதலால் திரும்பி வந்துவிட்டேன்.

அதன் பின்னர் மீண்டும் 24ஆம் தேதி சுவாதியை சந்தித்து எனது காதலை தெரிவித்தேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே அவரை கொலை செய்தேன் என ராம்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்