’நீங்கள் நினைத்தபடி என்னால் படிக்க முடியாது’ - கடிதம் எழுதிவிட்டு மாணவன் தற்கொலை

புதன், 14 ஜனவரி 2015 (16:39 IST)
நீங்கள் நினைத்தபடி என்னால் படிக்க முடியாது’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவன் தற்கொலை தூக்கிட்டு செய்து கொண்டுள்ளார்.
 
கோவை, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த விஜயகுமார் வாஜ்பாய் என்பவர் வனக்கல்லூரியில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். இவரது மகன் நிகேஷ் வாஜ்பாய் (22) பீளமேட்டிலுள்ள தனியார் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு, பி.எஸ்சி., இயற்பியல் படித்து வந்துள்ளார்.
 
அவரது பெற்றோர் மேற்படிப்பாக, எம்.எஸ்.சி.தான் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு, தனி அறையில், மாணவர் படித்து கொண்டிருந்த நிகேஷ், நேற்று காலை தூக்குப் போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. 
 
தகவலறிந்த சாயிபாபா காலனி காவல் துறையினர், அங்கு சென்று சடலத்தை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் நடத்திய விசாரணையின்போது மாணவர் அறையில் ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது.
 
அந்த கடிதத்தில், 'உங்கள் விருப்பப்படி என்னால் எம்.எஸ்.சி. படிக்க முடியாது. பயமாக இருக்கிறது. என்னை மன்னித்து கொள்ளுங்கள். நீங்கள் யாரும் இதற்காக சண்டை போடக்கூடாது; சாரி' என எழுதி வைத்துள்ளார்.
 
தற்கொலை செய்து கொள்ளும் முன்பு, தூக்கிட்டு கொள்வது குறித்து, தனது மடிக்கணினி மூலம் இணையத்தளத்தில் படம் பார்த்துள்ளார். இன்டர்நெட்டில் பார்த்தது போன்று, கயிறு கட்டி, தூக்கில் தொங்குவது போன்று, மொபைல் போனில் படம் எடுத்துள்ளார். அதனை தனது நண்பர்களுக்கு 'வாட்ஸ்அப்'பில் அனுப்பி விட்டு அழித்ததும், விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்