திமுக பொருளாளர் பதவிக்கு நான் போட்டியிடப் போவதில்லை: ஆ.ராசா

புதன், 2 செப்டம்பர் 2020 (11:35 IST)
திமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வரும் ஒன்பதாம் தேதி நடைபெறும் பொதுக் குழுவில் தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. நாளை முதல் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூபாய் ஆயிரம் கட்டணம் செலுத்தி சென்னை அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என திமுக தலைமை அறிவித்துள்ளது 
 
திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் மட்டுமே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் திமுக பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலு, எ.வல்.வேலு மற்றும் ஆ ராசா போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும், கனிமொழியும் போட்டியிடலாம் என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதில் ஆ.ராசா போட்டியிட்டால் அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுவதால் திமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்த நிலையில் திடீரென திமுக பொருளாளர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதில்லை என ஆ.ராசா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியபோது ’திமுக பொருளாளர் பதவிக்கு நான் போட்டியிட போவதில்லை. காட்சியில் என்னைவிட சீனியர்கள் பலர் உள்ளனர். எனவே மேற்கொண்டு இதை பற்றி பேசுவதற்கு எதுவுமில்லை’ என்று ஊடகமொன்றுக்கு தொலைபேசி மூலம் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்
 
ஆ.ராசா போட்டியிலிருந்து விலகியதை அடுத்து அடுத்த திமுக பொருளாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு திமுக தொண்டர்களிடையே உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்