நான் பச்சை தமிழன்: ரஜினி ஆவேசம்!

வெள்ளி, 19 மே 2017 (09:32 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா இல்லையா? என்ற பேச்சு ஊர்முழுக்க பேசப்படுகிறது. 9 வருடத்திற்கு பின்னர் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வரும் ரஜினிகாந்த் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்.


 
 
முதல் நாள் பேசிய ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வரமாட்டேன் என நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள் என தனது அரசியல் நிலைப்பாட்டை கூறினார். அந்த பேச்சு குறித்த அலசல்கள் இன்னமும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.
 
இந்நிலையில் இன்று மீண்டும் பேசிய ரஜினிகாந்த் மிகவும் உற்சாகமாக பேசினார். நான் ஒரு பச்சை தமிழன் என பேசிய ரஜினிகாந்த், போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
 
தனக்கு இருக்கும் எதிர்ப்பை பற்றி கூறிய ரஜினி எதிர்ப்பு இருந்தால் தான் வளர முடியும், அதுவும் அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம். மேலும் அரசில் சிஸ்டம் சரியில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்