மந்திரத்தால் கொரோனாவை குணப்படுத்துவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்தவர் கைது

ஞாயிறு, 26 ஜூலை 2020 (19:29 IST)
மந்திரத்தால் கொரோனாவை குணப்படுத்துவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்தவர் கைது
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அந்த வைரஸிலிருந்து பொது மக்களை காக்க தடுப்பூசி கண்டுபிடிக்க உலகம் முழுவதும் மருத்துவர்கள் போராடி வருகின்றனர்
 
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனாவை மாயத்தாலும், மந்திரத்தாலும் குணப்படுத்தி விடுவேன் என்று கூறி பல லட்சம் மோசடி செய்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர் 
 
ஐதராபாத் அருகில் உள்ள  ஹனிப் என்ற காலனி பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் பாபா. இவர் கொரோனாவை குணப்படுத்துவதாக கூறி காய்ச்சல் இருமல் சளியுடன் வருபவர்களுக்கு மந்திரங்கள் சொல்லி, எலுமிச்சம் பழம் மற்றும் விபூதி வழங்கி வந்துள்ளார். இதற்காக அவர் ஒவ்வொருவரிடமும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வாங்கி உள்ளதாக தெரிகிறது 
 
இது போல் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் ஏமாந்து உள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து அவரை கண்காணித்து வந்த போலீசார் இஸ்மாயில் பாபாவை கைது செய்தனர் மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்