சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பது எப்படி?

வியாழன், 16 பிப்ரவரி 2017 (22:52 IST)
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய பெரும்பான்மையை 15 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டுள்ள நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்


எத்தனை எம்எல்ஏக்கள் ஆளுநரை நேரில் சந்தித்து ஆதரவுக் கடிதம் கொடுத்தாலும் அது சட்டப் பேரவையை கட்டுப்படுத்தாது. பேரவையில் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் யாருக்கு ஆதரவு தருகிறார்களோ அவர் மட்டுமே முதல்வராக நீடிக்க முடியும்

சட்டசபையில் பெரும்பாலும் குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும். ஆனால், இதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழு சம்மதம் இருக்க வேண்டும். இல்லையேல் முதல்வரின் உரைக்கு பின்னர் அவரை ஆதரிக்கும் உறுப்பினர்களை கை தூக்கவோ அல்லது எழுந்து நிற்கவோ சொல்லி எண்ணிக்கை நடத்தப்படும். அதேபோல் எதிர்ப்பவர்களையும் கைதூக்கவோ அல்லது எழுந்து நிற்க சொல்லியோ எண்ணப்படும். இதிலும் உடன்பாடு இல்லாத பட்சத்தில் மறைமுக வாக்கெடுப்பு நடத்தப்படும். ஒவ்வொரு எம்.எல்.ஏக்களுக்கு சீட்டு வழங்கப்பட்டு பின்னர் ஆதரவு வாக்குகள் எத்தனை, எதிர்ப்பு வாக்குகள் எத்தனை என்பது எண்ணப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்