பரோட்டாவுக்கு குருமா கேட்டதால் தகராறு! – கஸ்டமரை அடித்துக் கொன்ற உணவக உரிமையாளர்

வியாழன், 11 பிப்ரவரி 2021 (08:38 IST)
கோவையில் பரோட்டாவுக்கு கூடுதலாக குருமா கேட்ட விவகாரத்தில் உணவருந்த வந்தவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் முத்துக்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய ராஜ். இவர் அங்குள்ள கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் பரோட்டா சாப்பிட சென்றுள்ளார். அப்பொது பரோட்டாவுக்கு கூடுதலாக குருமா கேட்ட விவகாரத்தில் ஆரோக்கிய சாமிக்கும் கடை பணியாளருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த கைகலப்பு சம்பவத்தில் உணவக உரிமையாளர் கருப்பசாமி மற்றும் சிலர் கடுமையாக தாக்கியதால் ஆரோக்கியசாமி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் ஆரோக்கியசாமி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள நிலையில், கருப்பசாமி மற்றும் முத்து என்பவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்