எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை

வியாழன், 17 ஜனவரி 2019 (20:49 IST)
சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு தவறுதலாக எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தவறுக்கு காரணமான ரத்தம் ஏற்றியவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், ரத்தம் கொடுத்தவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்யப்பட்டார். தவறுதலாக ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடும், அரசு பணியும் தமிழக அரசு வழங்கவிருப்பதாகவும் கூறாப்பட்டது.

இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சாத்தூர் கர்ப்பிணி இருந்து வந்தார். அவருடைய  வயிற்றில் உள்ள குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் இருக்க மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன் சாத்தூர் பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாகவும், பிரசவத்திற்கு பின் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்