மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட் ! இனி வார, வாரம் இலவச விளையாட்டு பயிற்சி

திங்கள், 28 நவம்பர் 2022 (23:49 IST)
கிராமப்புற மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட் ! இனி வார, வாரம் இலவச விளையாட்டு பயிற்சி - முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை அவர்களது வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை மும்மூரம்... 
 
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சியில் வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை சார்பில் கிராமப்புற மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இலவச கையுந்து பந்து பயிற்சிக்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும், வீ  தி  லீடர்ஸ் அறக்கட்டளையின்  முதன்மை சேவகருமான அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலின் படி, வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை சார்பாக பல்வேறு இலவச பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.


இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி  பகுதியில் அமைந்துள்ள நீதிமன்றம் எதிரே, கிராம புற மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்துவதற்காக, அரவக்குறிச்சி வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை சார்பாக, சுற்றியுள்ள கிராம புற ஏழை மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில் இலவச கையுந்து பந்து (Volleyball ) பயிற்சியின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாணவ, மாணவிகள் பயிற்சியில் ஆர்வமுடன் பங்ககேற்றனர், இனி வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் வாரா, வாரம் பயிற்சி நடைபெறும் என்று வீ தி லீடர்ஸ்  தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த துவக்க விழா நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக  சமூக ஆர்வலர்கள் நல்லசாமி,  சிவகுமார்,  நாச்சிமுத்து,  வழக்கறிஞர் ராம்குரு, முன்னாள் தலைமை ஆசிரியர் வீரமலை,  பயிற்சியாளர் கௌதம், ராஜா மற்றும் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ந. பாஸ்கர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  மேலும் இப்பயிற்சியில் சேர  ஆர்வமுள்ளவர்கள் 13 முதல் 21 வயது வரை உள்ள ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் பங்குபெற வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இந்த பயிற்சியானது முற்றிலும் இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் நடக்கவிருக்கும் மாவட்ட, மாநில அளவிளான கையுந்து பந்து போட்டியில் கலந்து கொண்டு, அரவக்குறிச்சிக்கு மண்ணிற்கும்,  மக்களுக்கும் பெருமை சேர்ப்போம் என்று  ஆடவர் அணி மற்றும் மகளிர் அணி மாணவ,  மாணவிகள் உற்சாகமுடன் நம்பிக்கை தெரிவி்த்தனர், இவர்களை வீ தி லீடர்ஸ் அறக்கட்டளையினர் ஊக்கப்படுத்தி வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்