உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள் கைது

திங்கள், 25 ஜூலை 2016 (12:19 IST)
வழக்கறிஞர்களுக்கான சட்ட திருத்ததை எதிர்த்து இன்று உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 


வழக்கறிஞர்களுக்கான சட்ட திருத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக வழக்கறிஞர்கள் அறிவித்தனர். அதை தொடர்ந்து, காலை இன்று 10:30 மணிக்கு  பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த  சுமார் 25 ஆயிரம் வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொது மக்களுக்கு இடையூறாக இருந்தது. இந்நிலையில், காவல்துறையினர் வைத்திருந்த தடுப்பணைகளை மீறி வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் நுழைய முயன்றனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், வழக்கறிஞர்கள் சட்‌டத்திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக 126 வழக்கறிஞர்களை இந்திய பார்கவுன்சில் பணியிடை நீக்கம் செய்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்திய பார் கவுன்சில் பொதுக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்