தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

திங்கள், 2 டிசம்பர் 2019 (16:10 IST)
தென் தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் கனமழைக்கு  வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை வலுவாக உள்ளது. தமிழகத்தில் 17 இடங்களில் கனமழையும், 3 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது.
 
தென் தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. தென் மேற்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு  பகுதி நிலவி வருகிறது.
 
தென் தமிழகத்தில், டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  வட தமிழகத்தில ஒருசில இடங்களில் மழை வாய்ப்பு உள்ளது. மேலும், காவிரி டெல்டா, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில்  மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்