தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து, நீர் நிலைகள் நிரம்பியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் நீர் புகுந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் உள் பகுதியில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் விளைவாக, அக்டோபர் 14 ஆம் தேதி தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை தொடரும்.
அக்டோபர் 14 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும். அக்டோபர் 15 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை எட்டும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.