15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை

ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (13:46 IST)
இன்று தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
வங்கக் கடலில் தோன்றிய புயல் கரையைக் கடந்த போதிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
 
இந்த நிலையில் வட தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி மற்றும் தஞ்சை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்