அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

சனி, 9 டிசம்பர் 2023 (13:41 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது
 
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் டிசம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரைபையும் என்றும் அதனால் பொதுமக்கள் மற்றும் நகர நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யும் என்று கூறிய 14 மாவட்டங்கள் இதோ:
 
1.சென்னை
2.செங்கல்பட்டு
3.காஞ்சிபுரம்
4.கடலூர்
5.விழுப்புரம்
6.பெரம்பலூர்
7.தஞ்சாவூர்
8.திருவாரூர்
9.மதுரை
10.ராமநாதபுரம்
11.சிவகங்கை
12.திருநெல்வேலி
13.தூத்துக்குடி
14.தென்காசி
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்