இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த வட்டார தொடக்க கல்வி அலுவலர் பாண்டி விசாரணை நடத்தினார். விசாரணையில் தலைமை ஆசிரியை மாணவியை செருப்பால் தாக்கியது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியையை தொடக்ககல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.