டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் ஜனவரியில் கட்சி துவக்கம் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தான் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறியிருந்தார் என்பதும், சரியாக மூன்று வருடங்கள் கழித்து அவர் தனது அரசியல் கட்சியை அறிவிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது டுவிட்டரில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது: வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பெயர் பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற, ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்றும் அற்புதம் அதிசயம் நிகழும்; இவ்வாறு ரஜினிகாந்த் குறிப்பிட்டு உள்ளார்.