குடிமகன்களுக்கு ’இன்ப’ அறிவிப்பு: 10 குவாட்டர் வாங்கினால் ஒன்று இலவசம்

வியாழன், 27 அக்டோபர் 2016 (13:35 IST)
தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள தனியார் மதுக்கடை ஒன்றில் 10 குவாட்டர் வாங்கினால் ஒரு குவாட்டர் இலவசம் என அறிவித்து குடிமகன்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

 
தேனி மாவட்டம் சின்னமனூரில் வானவில் என்ற தனியார் மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடையில் 10 குவாட்டர் வாங்கினால் ஒன்று இலவசம் என்றும், 10 பீர் வாங்கினால் ஒரு பீர் ஒன்று இலவசம் என்றும், 5 குவாட்டர் ஒரு கட்டிங் இலவசம் என்றும் அறிவித்துள்ளது.
 
மேலும், 5 வகையான நொறுக்கு தீனிகள் எப்பொழுதும் இலவசம் என்றும் அந்த மதுபான கடை அறிவித்துள்ளது. இதை தீபாவளி சலுகையாக அறிவித்துள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்