வைகோவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவோம்: எச்.ராஜா

செவ்வாய், 4 டிசம்பர் 2018 (21:14 IST)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த சில மாதங்களாக மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்று சூளுரைத்து வருகிறார்.

இந்த நிலையில் அரசியல் களத்திலிருந்து வைகோவை அப்புறப்படுத்த வேண்டும் என மிக காட்டமாக தனது டுவிட்டர் பக்கத்டில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

"மாண்புமிகு பிரதமர் மோடிஜி அவர்களையும், மேதகு ஆளுநர் அவர்களையும் வைகோ அவர்கள் அநாகரிகமாக பேசியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். ஆங்கிலேய கிறித்தவ ஏகாதிபத்தியத்தின் புரோக்கராக இருப்பவர், ஆளுநரை புரோக்கர் என்கிறார். இந்த வெட்கம் கெட்ட கும்பலை அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த உறுதியேற்போம்" என பதிவு செய்துள்ளார்.

எச்.ராஜாவின் இந்த பதிவுக்கு ஆதரவும் ஏதிர்ப்பும் தெரிவித்து பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மாண்புமிகு பிரதமர் மோடிஜி அவர்களையும், மேதகு ஆளுநர் அவர்களையும் வைகோ அவர்கள் அநாகரிகமாக பேசியுள்ள தை வன்மையாக கண்டிக்கிறேன். ஆங்கிலேய கிறித்தவ ஏகாதிபத்தியத்தின் brokers ஆளுநரை broker என்கிறார். இந்த வெட்கம் கெட்ட கும்பலை அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த உறுதியேற்போம்.

— H Raja (@HRajaBJP) December 4, 2018

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்