மாநில அரசுகளுக்கு எந்த உரிமையும் இல்லை... எச்.ராஜா காட்டம்

செவ்வாய், 31 டிசம்பர் 2019 (17:51 IST)
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மாநில அரசுகள் கூற சட்டத்தில் இடமில்லை என  எச்.ராஜா தெரிவித்துள்ளார். 
 
எதிர்க்கட்சிகளின் பலமான எதிர்ப்பையும் மீறி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் இன்று வரை போராட்டங்கள் நடந்து வருகிறது.  
 
இந்திய குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் மாற்றங்களுக்கு பலமான எதிர்ப்புகள் உருவாகியுள்ள நிலையில் ஆறு மாநில் முதல்வர்கள் இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஏற்கனவே தெரிவித்துள்ளனர். 
 
இந்நிலையில், கேரளா சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் இன்று, சி.ஏ.ஏ.வை வாபஸ் பெறக் கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இத்தீர்மானத்துக்கு சட்டசபையில் காங்கிரஸ் கட்சியும் ஆதரவை தெரிவித்துள்ளது.
 
இதற்கு தற்போது எச்.ராஜா பதிலடி கொடுக்கும் விதமாக, இந்து விரோதமாக பேசுவதற்குப் பெயர் கருத்துச் சுதந்திரம் அல்ல. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மாநில அரசுகள் கூற சட்டத்தில் இடமில்லை என தெரிவித்துள்ளார். 
 
இதற்கு முன்னர் மத்திய அரசும், இந்த சட்ட திருத்தத்தில் மாநில அரசுகள் இணைக்கப்படவில்லை என்றும், நாட்டின் பாதுகாப்பு கருதி கொண்டுவரப்படும் சட்டங்கள் நாடு முழுவதற்கும் பொருந்தும் என்பதால் இதை பின்பற்றுவதை மாநில அரசுகள் மறுக்க முடியாது என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்