நீட் தேர்வு மூலம் கீழ்த்தர அரசியல்: எச்.ராஜா கண்டனம்

ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (18:28 IST)
நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் நேற்று மூன்று உயிர்கள் பரிதாபமாக பலியானது அடுத்து இன்று நீட் தேர்வு பெரும் பரபரப்புக்கு இடையே நடைபெற்றது. சற்றுமுன் நீட்தேர்வு முடிவடைந்த நிலையில் நீட் தேர்வு மிக எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் நீட் தேர்வு மூலம் அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் கூறியுள்ளார். வள்ளியூரில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:
 
நீட் தேர்வு மூலம் அரசியல் செய்யும் திமுகவை வன்மையாக கண்டிக்கின்றேன். ஜெ.ஈ.ஈ தேர்வுகளுக்கு எதிராக போராடதவர்கள் நீட் தேர்வுகளுக்கு எதிராக மட்டும் போராடுவது ஏன் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார் சமச்சீர் கல்வியில் குழந்தைகளை சேர்த்து விட்டு அதன் பின்னர் இரு மொழிக் கொள்கை பற்றி பேசுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்