செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையத்தில், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எப்) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கு பணிபுரிந்து வந்த சிஐஎஸ்எப் வீரர் ரவி கிரண் என்பவர், பணி முடிந்து பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேகத்தடையில் பேருந்து ஏறி, இறங்கியபோது எதிர்பாராதவிதமாக அவர் வைத்திருந்த துப்பாக்கியில் கைவிரல் பட்டத்தில் வெடித்தது. இதில் ரவி கிரண் கழுத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.