பரந்தூர் விமான நிலையம் வேண்டாம்.. கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்..!

திங்கள், 1 மே 2023 (14:57 IST)
தமிழக முழுவதும் இன்று மே ஒன்றாம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஏகனாபுரம் அரசு பள்ளியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பரந்தூர்  விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஏற்கனவே ஐந்து முறைபரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில் தற்போது ஆறாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இரண்டாவது விமான நிலையமாக பரந்தூர் விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு அதற்கான பணிகளையும் செய்து வருகிறது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே அந்த பகுதி மக்கள் பரந்தூர் விமான நிலையம் அமைக்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பரந்தூர்  விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் ஏற்றப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்