கிராம சபை கூட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஓட்டம் பிடித்த மக்கள்: என்ன காரணம்?

வியாழன், 26 ஜனவரி 2023 (17:51 IST)
கிராம சபை கூட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அதில் கலந்து கொண்ட மக்கள் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஜனவரி 26, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தினங்களில் கிராம சபை கூட்டம் நடப்பது தமிழகத்தில் வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் திருவாரூரில் கிராம சபை கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 
 
இந்த கூட்டத்தின் முடிவில் தென்னங்கன்றுகள் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கிராம சபை கூட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தென்னங்கன்று கொடுக்கப்பட்டது
 
இந்த நிலையில் தென்னங்கென்றை வாங்கியவுடன் கூட்டத்தில் முழுமையாக பங்கேற்காமல் பொதுமக்கள் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் ஒரு சில நபர்களை மட்டுமே வைத்து கிராமசபை கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்