கொரோனா தொற்று அறிகுறிகள் தெரிந்தால், மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதே போல கல்லூரிகளும் திறக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏற்கனவே ஒரு சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என செய்திகள் வெளியாவதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
எனவே, தற்போது மாவட்ட கல்வி அதிகாரிகள் சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது காய்ச்சல், வாந்தி, பேதி, இருமல், உடல் வலி, சோர்வு உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிகள் தெரிந்தால், மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.