10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பால் அதிர்ச்சியில் மாணவர்கள்!

செவ்வாய், 28 ஜனவரி 2020 (15:01 IST)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தமிழக அரசின் தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்தின் எந்த மூலையிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் பத்தாம் வகுப்பை பொருத்தவரை இதற்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்விகளில் இருந்துதான் பெரும்பாலான கேள்விகள் வரும். ஆனால் தற்போது தேர்வுத்துறை அறிவித்துள்ளது என்னவெனில் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களைப் போலவே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்தின் எந்த மூலையிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம் என்ற புதிய வகையில் கேள்வித் தாள்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது
 
இந்த அறிவிப்பு பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது. வழக்கம்போலவே பத்தாம் வகுப்பு கேள்வித்தாள் இருக்க வேண்டும் என்றும் புதிய வகையில் கேள்வித்தாள் இருந்தால் பல மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கருத்து கூறி வருகின்றனர். கல்வியாளர்களும் இது தேவையில்லாத ரிஸ்க் என்று கூறிவருகின்றனர். இந்த கோரிக்கையை ஏற்று மீண்டும் பழைய முறையிலேயே பத்தாம் வகுப்பு கேள்வித்தாள் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்