புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரண தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரண தொகை தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது புதுச்சேரியிலும் கொரோனா நிவாரண தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 கொரோனா நிவாரண தொகையாக வழங்கப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.