சனாதன தர்மம் உலகிற்கு தேவையானது, அது அழியாது: கவர்னர் ரவி..!

புதன், 27 செப்டம்பர் 2023 (19:19 IST)
சனாதன தர்மம் உலகிற்கு தேவையானது என்றும் அது என்றும் அழியாது என்றும் தமிழக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். 
 
இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் சனாதன தர்மத்தின் மிகவும் முக்கியமான பகுதியாக தமிழ்நாடு உள்ளது என்றும் சனாதன தர்மம் உலகிற்கு தேவையானது என்றும் அது அழியாது என்றும் கூறினார். 
 
மேலும் பாரதம் இன்னொரு பிரிவை ஏற்றுக் கொள்ளாது என்று கூறிய அவர் சனாதனம் தேவையானது என்று அழுத்தமாக திரும்ப திரும்ப கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
திமுகவில் உள்ளவர்கள் சனாதனத்தை ஒழிப்போம் என்று ஒரு பக்கம் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் சனாதனம் உலகிற்கு தேவையானது என்று தமிழக ஆளுநர் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்