அன்று வெளியே போ என சொன்ன பொன்முடி.. இன்று கப்சிப் ஆன அமைச்சர்கள்..!

Siva

திங்கள், 12 பிப்ரவரி 2024 (15:00 IST)
கடந்த ஆண்டு சட்டமன்ற    கூட்டத்தின் போது ஆளுநர்  அவையில் இருந்து வெளிநடப்பு செய்த போது வெளியே போ என முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் இன்று அவரால் சட்டமன்ற கூட்டத்திலேயே கலந்து கொள்ள முடியாத அளவில் அவர் வழக்கில் சிக்கி  மேல்முறையீட்டு முடிவுக்காக காத்திருக்கிறார். 
 
இந்த நிலையில் இன்று ஆளுநர்  ரவி, தமிழக அரசின் உரையை வாசிக்க மறுத்ததோடு அவர் இரண்டு நிமிடம் அது குறித்து விளக்கம் அளித்தார். அதன் பிறகு ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த் என்று முழங்கி விட்டு கம்பீரமாக அவையை விட்டு வெளியே சென்றார். 
 
அன்று பொன்முடிம், கவர்னரி வெளியே போ என்று அவமதித்தது போல இன்று அமைச்சர்கள் யாரும் அதுபோல் செய்யவில்லை. அனைவரும் அமைதியாக இருந்தனர்.  
 
அமைச்சர் பொன்முடி கவர்னரை வெளியே போ என்று சொன்னதால்தான் அவரது வழக்கு விரைவாக முடிக்கப்பட்டு தண்டனை கிடைத்ததாகவும் அதனால் தான் மற்ற அமைச்சர்கள் அமைதியாக இருந்ததாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்