கவர்னர் ரொம்ப மாறிட்டார்; அழைப்பிதழில் ‘தமிழ்நாடு’!

திங்கள், 23 ஜனவரி 2023 (09:16 IST)
கடந்த சில காலமாக ஆளுனர் – தமிழ்நாடு அரசு இடையே முரண்பாடுகள் எழுந்து வந்த நிலையில் சமீபமாக ஆளுனர் வெளியிட்ட அழைப்பிதழில் ‘தமிழ்நாடு’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்கள் முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுனர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை ‘தமிழகம்’ என்று அழைப்பதே சரி என கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்தொடரில் கவர்னர் உரையில் சில பகுதிகளை பேசாமல் தவிர்த்தது, பாதியிலேயே சட்டமன்றத்திலிருந்து வெளியேறியது உள்ளிட்டவை சர்ச்சைக்குள்ளானது.

அதை தொடர்ந்து திமுக குடியரசு தலைவரிடம் ஆளுனர் குறித்து புகார் அளித்தது. பின்னர் டெல்லி சென்ற ஆளுனர் ரவி குடியரசு தலைவரை சந்தித்து பேசி தமிழ்நாடு திரும்பினார் ஆளுனர் ரவி.

அதன் பின்னர் தமிழ்நாடு பெயர் சர்ச்சை குறித்து தனது விளக்கம் ஒன்றையும் அளித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது குடியரசு தின விழாவை முன்னிட்டு கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் ‘தமிழ்நாடு’ என்றே பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சமீபத்தில் குடிமைப்பணி பயிற்சி பெறுபவர்களுடன் பேசும்போதும் தமிழ்நாடு குறித்து மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார் ஆளுனர் ஆர்.என்.ரவி. ஆளுனரின் இந்த மாற்றம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்