அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போராட்டம் நடத்திய நிலையில், தற்போது அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில்,
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24ஆம் தேதி மாவட்ட அளவில் அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த உள்ளதாகவும், ஏப்ரல் 3ஆம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 25ஆம் தேதி மாநில அளவில் முழு நேர கோரிக்கை தர்ணா போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது போராட்ட தேதியை மீண்டும் அறிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.