நெடுவாசலில் கோபிநாத் எழுச்சி உரை: நிச்சயம் பார்க்க வேண்டிய வீடியோ!

புதன், 1 மார்ச் 2017 (11:49 IST)
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்போகும் மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழகம் முழுவதிலும் இருந்தும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் வருகின்றன.


 
 
பல்வேறு கட்சிகள், அமைப்புகள், பிரபலங்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் தங்கள் ஆதரவை நெடுவாசலில் போராட்டம் நடத்தும் மக்களுக்கு அளித்து வருகின்றனர். விவசாயத்தை பாதிக்கும் இந்த திட்டத்தை அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் மண்ணின் மைந்தன் என்ற முறையில் நெடுவாசல் போராட்ட களத்துக்கு சென்று நேரில் தனது ஆதரவை அளித்தார் தொலைக்காட்சி பிரபலம் கோபிநாத். அங்கு அவர் எழுச்சிமிகு உரை ஒன்றையும் நிகழ்த்தினார்.

 

 
 
போரட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முன்னிலையில் பேசிய கோபிநாத், தமிழக மக்களை மீறி ஒரு பிடி மண்ணைக் கூட நெடுவாசலில் இருந்து எடுக்க முடியாது என சூழுரைத்தார். தமிழகர்கள் மீது பொதுவாக வைக்கப்படும், வளர்ச்சியை விரும்பாதவர்கள், பழமைவாதிகள், எதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு சாட்டையடி பதில்களை கொடுத்தார் கோபிநாத்.
 
மேலும் ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் எப்படி போராட்டத்தை முன்னெடுத்தார்களோ அது போல இந்த போராட்டமும் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கூறினார். இந்த ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தில் உள்ள அரசியல் உள்ளிட்ட பலவற்றை தனது உரையில் கூறினார் கோபிநாத். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்