தங்கம் விலை தொடர்ந்து சரிவு

வெள்ளி, 18 ஜூன் 2021 (18:50 IST)
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதற்கிடையே  சில நாட்களாகத்  தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

கொரொனா இரண்டாம் அலைத் தொற்று உலகில் முழுவதும் பரவி வருகிறது. பொருளாதர ஸ்திரமின்மையால் பெரும்பாலான நாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள், அமெரிக்க டாலர்கள், எண்ணெய் நிறுவனங்களில், கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்வதைவிட தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வந்தனர். இதனால் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் சில நாட்களாகத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.நேற்று சென்னையில் ஒரு சவரனுக்கு ரூ.616 குறைந்தது ஒரு சவரன் ரூ 36,000க்கு விற்பனை ஆனது.

இந்நிலையில், இன்று, காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360  குறைந்து, சவரன் ரூ.35,640 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ45 குறைந்து  ரூ.4,455 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்