இதற்கிடையில், ராகுல் காந்தி, அமித் ஷா, அருண் ஜேட்லி, வெங்கைய்யா நாயுடு உள்ளிட்ட தேசிய தலைவர்களும், வைகோ, முக.ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழக ஆளுநர், தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்களும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜயகுமார் நேற்று அப்பல்லோ மருத்துவமனை வந்து அவரின் உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயலலிதா மிகவும் துணிச்சலானவர். என்னுடைய நண்பர் ரஜினிகாந்த் சொல்வதைப்போல் கடவுள் நல்லவர்களை சோதிப்பார். ஆனால் கைவிட மாட்டார்.