ஏழு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி : கரூரில் அதிசயம்

புதன், 24 ஆகஸ்ட் 2016 (17:04 IST)
கரூர் அருகே ஒரு ஆடு 7 கால்களுடன் கூடிய ஒரு ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
 
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கடவூர் தாலுக்கா, தரகம்பட்டி பகுதியை அடுத்த மாவத்தூர் ஊராட்சி பகுதியில் உள்ள பசுபதிபாளையத்தில் பெருமாள் என்பவரது பழனியம்மாளின் வெள்ளை ஆடு குட்டிகளை ஈன்றது. 
 
எப்போதுமே ஆட்டுக்குட்டிகள் என்றால் ஈனும் போது இரண்டு குட்டிகள் மட்டும் தான் ஈனும். ஆனால் இவரது ஆடு, மூன்று குட்டிகளுடன் ஈன்றதோடு, அதில் ஒரு குட்டிக்கு 7 கால்கள் உள்ள நிலையில் அப்பகுதியில் சுவாரஸ்யம் ஏற்பட்டதோடு, ஆங்காங்கே இருந்த மக்கள் இந்த ஆட்டிக்குட்டிகளை காண ஆர்வத்துடன் கூட்டம், கூட்டமாக கூடி வருகின்றனர். 
 
மேலும் இந்த ஆட்டுக்குட்டிகள் அதிசய ஆடாக நினைத்து வரும் இப்பகுதி மக்கள் அந்த ஆட்டுக்குட்டிகளை ஆச்சரியத்துடன் பார்ப்பதோடு, கொஞ்சி வருகின்றனர்.

சி.ஆனந்தகுமார் - கரூர்

வெப்துனியாவைப் படிக்கவும்