மக்கள் நலக் கூட்டணிக்கு ஜி.கே. வாசன் குட்பை?

வெள்ளி, 3 ஜூன் 2016 (11:58 IST)
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தமாகா வெளியேற வேண்டும் என அக்கட்சி செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
 

 
தமாகா மாநில செயற்குழு கூட்டம் சென்னை  ஆழ்வார்பேட்டை கவிக்கோ அரங்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் தொடங்கியது.
 
இந்த கூட்டத்தில் மூத்த துணை தலைவர்கள் ஞானதேசிகன், வேலூர் ஞானசேகரன், கோவை தங்கம் உள்ளிட்ட முன்னாள் எம்பிக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
இந்த கூட்டத்தில் தேர்தலில் தமாகா தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, பேசிய நிர்வாகிகள் பலரும், தேர்தல் தோல்விக்கு பலமான கூட்டணி இல்லை என்றும், எதிர்காலத்தில் மக்கள் நலக்கூட்டணி கரைசேராது என்றும், எனவே, அக்கூட்டணியைவிட்டு வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
 
இதனால், மக்கள் நலக் கூட்டணியில் இருந்த தமாகா வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
 

வெப்துனியாவைப் படிக்கவும்