கருப்பண்ண சுவாமி பாடலுக்கு நடனம் ஆடிய பெண்கள்

திங்கள், 16 அக்டோபர் 2023 (21:00 IST)
கருப்பண்ண சுவாமி பாடலுக்கு நடனம் ஆடிய பெண்கள் ஆவேசத்தில் ஆக்ரோஷ நடனம் கலை கட்டிய பவளக்கொடி கும்மியாட்டம்.
 
கரூர் சின்னதாராபுரம் பவளக்கொடி கும்மி ஆட்டம் 64-வது அரங்கேற்றம் விழா ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்கள்,சிறுவர்கள் ஆடி பாடி கொண்டாட்டம்.
 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த சின்ன தாராபுரம் பகுதியில் பவளக்கொடி கும்மியாட்ட குழுவின் சார்பில் அரங்கேற்ற விழா நடைபெற்றது.
 
சின்னதாராபுரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற 64 ஆவது அரங்கேற்ற விழாவில் அப்பகுதி பொதுமக்கள் விநாயகர் வழிபாட்டை தொடங்கி,கோவிலில் இருந்து மேல தாளங்களுடன் ஊர்வலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முளைப்பாரியை எடுத்து வந்தனர்.
 
தொடர்ந்து மூத்த கடவுள் விநாயகர்க்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
 
பின்னர் பவளக்கொடி கும்மியாட்ட குழு ஒருங்கிணைப்பாளர் அம்மன் கே விஸ்வநாதன் தலைமையில் 64- வது அரங்கேற்ற நிகழ்ச்சி தொடங்கியது.
 
அரங்கேற்றத்தில் கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் 1000-க்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என ஒரே வண்ணத்திலான பாரம்பரிய  உடையணிந்து  கலந்து கொண்டு விநாயகர் மற்றும் முருகன், கருப்பண்ணசாமி, அம்மன் உள்ளிட்ட பக்தி பாடல்களுடன்  கும்மி ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர்.
 
அந்த அரங்கேற்ற நிகழ்ச்சியில் பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் திரளான கலந்து கொண்டுகும்மியாட்டத்தை கண்டு ரசித்தனர். இந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் அம்மன் விஸ்வநாதன், அருணாச்சலம் ஆகியோரும், பயிற்சி ஆசிரியராக வெள்ளகோவில் சித்ரா சிறப்பான முறையில் பயிற்சிகளை வழங்கினர். மேலும் தில் செந்தில் , C.M.மஹால் உரிமையாளர் மயில்சாமி , சிதம்பரம், ரத்னா, ரவி உள்ளிட்டோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்