கன்னியாகுமரியில் சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். காதல் திருமணம் செய்த வாலிபருக்கு ஒரு தங்கை இருந்துள்ளார். ஒரு நாள் அந்த வாலிபர், தன் தங்கையின் வீட்டிற்கு தன் மனைவியுடன் சென்றுள்ளார். அங்கு தங்கையின் கணவரும் இருந்துள்ளார். அப்போது தங்கையின் கணவர், வாலிபரின் மனைவியுடன் அன்பாக பேசிக்கொண்டிருந்தார். உறவு முறையில் அண்ணன் தங்கை என்பதால் இதனை யாரும் பொருட்படுத்தவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திகொண்ட இருவரும், காலப்போக்கில் எல்லை மீறிய பழக்கத்தில் ஈடுபட்டனர். பின்பு இது காதலாக மாறியது. இந்த விஷயம் வாலிபரின் தங்கைக்கு தெரியவர அதிர்ந்து போனார். உடனே கணவரை விட்டு பிரிந்து தனியாகச் சென்றார்.
தங்கையின் குடும்பம் பிரிந்ததற்கு தன் மனைவி தான் காரணம் என அறிந்த வாலிபர், மனைவியை கண்டித்தார். ஆனால் அவரின் பேச்சை மனைவி கேட்கவில்லை. இந்நிலையில் வாலிபரிடமிருந்து பிரிந்து, அண்ணன் முறை உறவினருடனேயே தங்கச் சென்றார் வாலிபரின் மனைவி. இது பற்றி அந்த பெண்ணின் கணவர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் கள்ளகாதலில் ஈடுபட்ட இருவரையும் போலீஸார், போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அந்த பெண், தனக்கு காதல் கணவர் வேண்டாம் என்றும் கள்ள காதலர் தான் வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்த போலீஸார், அந்த பெண்ணிற்கு எவ்வளவோ அறிவுரை கூற, அதை கேட்க மறுத்தார். இதனையடுத்து வேறு வழியில்லாமல், அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் போலீஸார். வாலிபர் தன் மனைவியை விவாகரத்து செய்யவிருப்பாதாக தகவல் தெரிவிக்கிறது, இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.