டிவிட்டாய் போட்டு தட்டிய காயத்ரி ரகுராம்: நோ கமெண்ட்ஸ்; சிம்ப்ளி வேஸ்ட்!!
திங்கள், 16 செப்டம்பர் 2019 (13:41 IST)
காயத்ரி ரகுராம் ஹிந்தி மொழிக்கு ஆதரவாக தனது டிவிட்டர் பக்கத்தில் பல பதிவுகளை அள்ளி தெறிக்கவிட்டுள்ளார்.
ஹிந்தி தின கொண்டாட்டத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது டிவிட்டர் பக்கத்தில், இந்தியா வெவ்வேறு மொழி கொண்ட நாடாக இருந்தாலும், ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதுதான் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும்.
ஆதலால் மக்கள் தங்கள் தாய் மொழிகளுடன் ஹிந்தியையும் சேர்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது ஹிந்தி மொழியால் மட்டுமேதான் முடியும் என பதிவிட்டார்.
அமித் ஷாவின் இந்த பதிவை பல அரசியல் தலைவர்கள், பாஜக ஹிந்தியை நுழைக்க பார்க்கிறது என கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகையும், நடன இயக்குனரும், பாஜகவை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம், ஹிந்தியை ஆதரரித்து டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டுகளை அள்ளிவிட்டுள்ளார்.
அவர் கூறியது பின்வருமாறு, இப்போது எனக்கு ஹிந்தி படிப்பது கஷ்டம். ஆனால் குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்யட்டும். இந்தி படிப்பது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள பயன்படும்.
இந்தி எந்தவொரு மாநிலத்தின் மொழியும் அல்ல. அது அதிகம் பேசப்படுகின்ற மொழி. தேசிய கொடி, தேசிய விலங்கு இருக்கும் போது, தேசிய மொழி இருக்கக்கூடாதா? இந்தி மொழி கற்றுக்கொள்வதால் தமிழை மறந்துவிடுடோம் என்று பயப்படுவது முட்டாள்தனம். தமிழ் மொழி வாழும். தமிழ் மொழியை முறையாக எத்தனை பேர் பேசுகிறோம். தமிழர்கள் என்று நடிக்க வேண்டாம்.
நாம் ஆங்கிலம் கலந்த தமிழில் தான் பேசுகிறோம், செந்தமிழில் எத்தனை பேர் பேசுகிறோம். தமிழ் மொழி நம்மிடம் எப்போதும் வாழும். தமிழ் நமது தாய் மொழி. நாம் கற்க நினைப்பதை தடுப்பவர்களின் பேச்சை கேட்க வேண்டாம்.
ஹிந்தி ஏற்கனவே பல மாநிலங்களில் பேசப்பட்டு வருகிறது. இனி தமிழ் மொழியை எல்லா மாநிலங்களிலும் பேச வைப்பது சாத்தியமில்லை என பதிவிட்டுள்ளார்.
காயத்ரி ஹிந்தி மொழியை ஆதரித்து போட்ட இத்தனை டிவிட்டுகளையும் பலர் எதிர்த்து உள்ளனர். அவர் ஹிந்தியை இவ்வளவு ஆதரித்ததற்காக பயன் சற்றுமில்லாமல் உள்ளதே நிதர்சனம்.