கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் நடைபெற்ற ஜி20 மாநாடு!

செவ்வாய், 28 மார்ச் 2023 (13:18 IST)
ஜி-20 என்பது 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் அமைப்பு  இந்தகூட்டத்தில் உலகப் பொருளாதாரத்தின் முதன்மைச் சிக்கல்களைக் கலந்து பேசி வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சி.

இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டு நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாக, கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில்,'G20 University Connect - Engaging Young Minds' என்கிற தலைப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆளுமைகள் கலந்துக்கொண்ட கருத்தரங்க  நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 
 
இந்நிகழ்வில், பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர், முனைவர் கே.பிரகாசன் வரவேற்புரை வழங்கினார். சிறந்த விருந்தினர்களாக, மத்திய வெளியுறவுத் துறையின் ஓய்வு பெற்ற செயலாளர், தூதுவர் ராகுல் சப்ரா,வளிமண்டல மற்றும் பெருங்கடல் அறிவியல் மையம் தலைமை வினயச்சந்திரன்,மூத்த விஞ்ஞானி பிரமோத்,பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் முதல்வர் சுப்ரமணியம் ராஜு மற்றும் மூத்த பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினர்.
 
இக்கருத்தரங்கில், ஜி20 மாநாட்டில் பங்குபெறும் சர்வதேச நாடுகளின் முக்கியத்துவம் மற்றும் ஜி 20 மாநாட்டில் ஆலோசிக்கப்படும் சர்வதேச அளவிலான பிரச்சனைகள், பொருளாதார முன்னேற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, வேளாண்மை வளர்ச்சி ஆகியவை குறித்த கருத்துக்கள் பகிரப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்