வீடு தேடி இலவச கல்வி !

திங்கள், 18 அக்டோபர் 2021 (16:13 IST)
தமிழகத்தில் வீடு தேடி கல்வி என்ற திட்டம் வரவுள்ளது . இது மாணவர்களுக்குப் பெரும் வரபிரசாதமாக இருக்கும் எனத் தெரிகிறது.

கொரொனா காலத்தில் ஊரடங்கினால் பள்ளிகள் ஆன்லைன் வாயிலான நடந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், நவம்பர்  1 முதல் 8 வரையிலான வகுக்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் அமைச்சர்  அன்பில் மகேஷ் முதலமைச்சர் ஸ்டாலினிடம் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டார். 
இதற்கான ஒப்புதல் பெற்று இன்று மாலையில் இத்திடம் தொடங்கப்படவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்