விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த வழக்கில் மேலும் 4 காவலர்கள் கைது!

சனி, 7 மே 2022 (17:04 IST)
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஏற்கனவே இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது மேலும் நான்கு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் காவலர் குமார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் தீபக், ஆயுதப்படை காவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 
 
ஏற்கனவே இரண்டு காவலர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் மொத்தம் ஆறு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் 
 
அதுமட்டுமின்றி 6 காவலர்கள் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்