7 பேர் விடுதலை விவகாரம்: தமிழக அரசுக்கு முன்னாள் நீதிபதி கூறும் ஐடியா

திங்கள், 10 டிசம்பர் 2018 (06:57 IST)
முருகன், நளினி , பேரறிவாளன் உள்பட ராஜீவ் காந்தி கொலையாளிகள் ஏழு பேர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தது. அதன்படி ஏழு பேர் விடுதலை குறித்து தீர்மானம் இயற்றிய தமிழக அரசு அந்த தீர்மானத்தை தமிழக கவர்னருக்கு அனுப்பியது. தமிழக கவர்னரின் ஒப்புதல் கிடைத்துவிட்டால் அடுத்த நிமிடமே ஏழுபேர் விடுதலை சாத்தியம் என்ற நிலையில் இதுகுறித்து கவர்னர் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளார்.

இந்த நிலையில் கவர்னரின் காலதாமதத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் 7 பேரின் விடுதலையில் காலதாமதம் செய்யும் ஆளுநரின் முடிவு குறித்து தமிழக அரசுக்கு ஜார்க்கண்ட் மாநில முன்னாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகம் யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.

கவர்னரின் காலதாமதம் குறித்து தமிழக அரசு அல்லது ஏழு பேர் சுப்ரீம் கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு வரலாம் என்றும், அவ்வாறு சுப்ரிம் கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு சென்றால் ஏழு பேர் விடுதலை சாத்தியமாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். ஜார்க்கண்ட் மாநில முன்னாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகம் அவர்களின் இந்த யோசனையை தமிழக அரசு பின்பற்றுமா? என்பதை பொறுத்திருந்தூ பார்ப்போம்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்